Categories
தேசிய செய்திகள்

தனிநபர் வருமான வரி விகிதத்தில் மாற்றமில்லை… 2.50 லட்சமாகவே தொடரும்..!!

தனிநபர் வருமான வரி விலக்கு உச்சவரம்பு எந்த மாற்றமுமின்றி 2.50 லட்சமாக தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

2022 – 23க்கான மத்திய பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார் நிர்மலா சீதாராமன். இது நிர்மலா சீதாரான் தாக்கல் செய்யும் நான்காவது பட்ஜெட்.. நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2ஆவது முறையாக இ-பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.. பல்வேறு அறிவிப்புகள் வெளியாகின..

ஆனால், மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் தனிநபர் வருமான வரி விகித மாற்றம் குறித்து எந்த அறிவிப்பும் இடம்பெறவில்லை.. தனிநபர் வருமான வரி விலக்கு உச்சவரம்பு எந்த மாற்றமுமின்றி 2.50 லட்சமாக தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |