Categories
உலக செய்திகள்

உக்ரைன் விவகாரம்…. ”அமெரிக்கா கோரிக்கை”…. ரஷ்யாவின் எழுத்துப்பூர்வ பதில்….!!

உக்ரைன் மற்றும் ரஷ்யாவிற்கு இடையில் நிலவிவரும் எல்லை பிரச்சினையில் பதற்றத்தை தணிக்க அமெரிக்கா விடுத்த கோரிக்கைக்கு எழுத்துப்பூர்வமாக ரஷ்யா பதில் அளித்துள்ளது.

ஒருங்கிணைந்த சோவியத் யூனியனில் ஒரு அங்கமாக உக்ரைன் திகழ்ந்தது. இதைத் தொடர்ந்து 1991 ஆம் ஆண்டு சோவியத் யூனியனில் ஏற்பட்ட பிளவின் காரணமாக ரஷ்யாவிலிருந்து உக்ரைன் தனி நாடாகப் பிரிந்து உள்ளது.

இதனால் உக்ரைனை தன் நாட்டுடன் இணைக்க வேண்டும் என்ற எண்ணம்  ரஷியாவிற்கு  இருந்துள்ளது. இதன் காரணமாக இரு நாடுகளுக்கும் எல்லை பிரச்சினை இருந்துள்ளது. 2014 ஆம் ஆண்டு உக்ரைனின் கிரிமியா தீபகற்பத்தை ரஷ்யா கைப்பற்றியது. இதனால்  இரு நாடுகளுக்கும் இடையே உள்ள மோதல் தீவிரமானது.அமெரிக்கா ஐரோப்பிய நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவளித்து வருவது மட்டுமல்லாமல் நோட்டா அமைப்பில் உறுப்பினராக சேர்க்கவும் முயற்சி செய்து  வருகிறது.

உக்ரைன் நோட்டா அமைப்பில்  இணைவதால் தங்கள் நாட்டிற்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படும் என கருதிய ரஷ்யா கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் அதிநவீன ஆயுதங்கள் போர்த் தளவாடங்கள் மற்றும்  1,25000 ஆயிரத்திற்கும் அதிகமான வீரர்களை  உக்ரைனின் எல்லையில் குவித்துள்ளது.

உக்ரைனுக்கு தேவையான இராணுவ உதவிகளை அமெரிக்க ஐரோப்பிய நாடுகள் வழங்கி வருகின்றன. உக்ரைன்  மீதான போர் பதற்றத்தைத் தவிர்ப்பதற்காக ரஷ்யா- அமெரிக்கா இடையே பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.

மேலும் போர் பதற்றத்தைத் தணிப்பதற்கு  ரஷ்யாவிற்கு அமெரிக்கா வேண்டுகோள் விடுத்துள்ளது. அமெரிக்கா விடுத்த கோரிக்கைக்கு இன்று ரஷ்யா எழுத்துப்பூர்வ பதில் வழங்கியுள்ளது. அந்த எழுத்துப்பூர்வ பதிவில் என்ன இருக்கிறது  என்பதை அமெரிக்க அதிகாரிகள் வெளியிடவில்லை. பேச்சுவார்த்தை நிகழ்வுகளை வெளியில் சொல்வது சிறந்ததல்ல என வெளியுறவுத்துறை அதிகாரிகள்  கூறியுள்ளனர் .

Categories

Tech |