பேருந்தில் வைத்து பெண்ணிடம் இருந்து நகையை திருடிய நபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள வேப்பங்குளம் கிராமத்தில் மீனா என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது 6 3/4 பவுன் தங்க நகையை புதுப்பித்து விட்டு பயணிகள் அதிகமாக இருந்த கல்லல் செல்லும் பேருந்தில் ஏறியுள்ளார். அதன் பின்னர் மீனா தனது காட்டைபையில் வைத்திருந்த பர்ஸ் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இதுகுறித்து மீனா காரைக்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் பேருந்தில் நகையை திருடிய மர்ம நபர் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.