Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

கோரிக்கையை நிறைவேற்றிய மாவட்ட நிர்வாகத்தினர் …. மகிழ்ச்சியில் விவசாயிகள்…!!

மக்களின் கோரிக்கையை ஏற்று நெல் கொள்முதல் நிலையம் அமைத்த மாவட்ட நிர்வாகத்திற்கு விவசாயிகள் நன்றி தெரிவித்துள்ளனர்.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வேலங்குடி கிராமத்தில் நெல் கொள்முதல் நிலையம் திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மானூர் ஒன்றிய கவுன்சிலர் ஜெயலட்சுமி சிங்கராஜ், நரிக்குடி ஊராட்சி மன்ற தலைவர் முத்துமாரி, காளீஸ்வரன், வேலங்குடி ஊராட்சி மன்ற தலைவர் ராஜேந்திரன், வேளாண் ஓரி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பாலமுருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்த விழாவை தி.மு.க. ஒன்றிய செயலாளர் போஸ் தேவர்,கு. கண்ணன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.  இந்நிலையில் கோரிக்கையை ஏற்று நெல் கொள்முதல் நிலையம் அமைத்து தந்த மாவட்ட நிர்வாகத்திற்கு நன்றி தெரிவிப்பதாக விவசாயிகள் கூறியுள்ளனர்.

Categories

Tech |