நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று குடியரசுத் தலைவர் உரையுடன் தொடங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பொருளாதார ஆய்வறிக்கை நேற்று வெளியானது. 2022- 23 ஆம் ஆண்டுக்கான காகிதமில்லா பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் இன்று காலை 11 மணியளவில் தாக்கல் செய்தார். வருமான வரி, உச்ச வரம்பு அதிகரிப்பு சலுகைகள் போன்ற பல்வேறு பட்ஜெட் தாக்குதல்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில்,
# இந்தியாவுக்கென பிரத்யேக கிரிப்டோ கரன்சி உருவாக்கப்படும்.
# இந்த ஆண்டே ரிசர்வ் வங்கி மூலம் டிஜிட்டல் பணம் அறிமுகப்படுத்தப்படும்.
# டிஜிட்டல் பணத்திற்கு என்று புதிய மத்திய வங்கி ஏற்படுத்தப்படும்.
# 25 மாவட்டங்களில் 75 டிஜிட்டல் வங்கி மையங்கள் அமைக்கப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.