ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் உருவாகி வரும் ‘RRR’படம் திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வ தகவலை படக்குழு வெளியிட்டுள்ளது.
பிரபல தெலுங்கு நடிகர் ராம்சரண், தேஜா மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோர் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘ரத்தம் ரணம் ரௌத்திரம்’. பிரமாண்ட பட்ஜெட்டில் தயாராகி வரும் இப்படத்தை பிரபல இயக்குனர் ராஜமௌலி இயக்கினார். மேலும் அஜய் தேவ்கன், சமுத்திரகனி, ஆலியா பட் உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர்.
தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய 5 மொழிகளில் இப்படம் வெளியாக உள்ளது. இந்த திரைப்படம் ஜனவரி 7ஆம் தேதி வெளியாக இருந்த நிலையில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ‘ஆர்.ஆர்.ஆர்’ திரைப்படத்தை வெளியிடுவதற்கு 100 சதவீத பார்வையாளர்களுடன் திரையரங்குகள் திறக்கப்பட்டால் மார்ச் 18ஆம் தேதி அல்லது ஏப்ரல் 28ஆம் தேதி ரிலீஸ் செய்யப்படும் என படக்குழு அறிவித்திருந்தது. இந்நிலையில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் இந்த திரைப்படம் மார்ச் 25ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் செய்யப்படும் என்று படக்குழு அறிவித்துள்ளது.