கொடிய விஷம் கொண்ட பாம்புகள் மற்றும் ஊர்வன இனங்களை இளைஞர் ஒருவர் வீட்டில் வளர்த்து வந்த இளைஞர்.
மத்திய அமெரிக்காவில் அமைந்துள்ள நிகரகுவா என்னும் நாட்டில் jose alberto deladillo (வயது 27) இளைஞர் ஒருவர் வசித்து வருகிறார். பாம்புகள் , உடும்புகள் , மற்றும் ஊர்வன, போன்றவை மீது அதிக பாசம் கொண்ட இவர் தனது வீட்டில் கொடிய விஷம் கொண்ட 45 பாம்புகள், 12 ஆமைகள் மற்றும் ஆறு உடும்புகள் போன்றவற்றை வளர்த்து வருகிறார்.
இவருக்கு அந்நாட்டின் தலைநகரான மெட்டா கல்பாவில் செல்லப்பிராணிகளுக்காக ஒரு பெட் ஸ்டோர் அமைக்க வேண்டும் என்பது கனவாக உள்ளது. எட்டு ஆண்டுகளுக்கு முன்னதாக ஊர்வன இனங்களை வளர்க்க தொடங்கிய இவர் முதலில் உடும்பை வளர்த்துள்ளார்.
இதையடுத்து பாம்புகளை வளர்தார் . இதுகுறித்து அவர் கூறியதாவது ஊர்வன இனங்களை நாம் தொந்தரவு செய்தால் மட்டுமே அது நமக்கு ஆபத்தை ஏற்படுத்தும் எனவும் கூறியுள்ளார்.