Categories
உலக செய்திகள்

பல முறை தொந்தரவு…. மாணவர்களிடம் அத்துமீறிய ஆசிரியர் கைது… கனடாவில் பரபரப்பு…!!!

கனடாவில் ஒரு நடுநிலைப் பள்ளியின் ஆசிரியர் மாணவர்களிடம் தவறாக நடந்து கொண்டதால் கைதாகியுள்ளார்.

கனடாவிலிருந்து உள்ள ரொரன்ரோ மாகாணத்தின் ஒரு பள்ளியில் பணிபுரியும் பிரெஞ்சு ஆசிரியர் கடந்த வருடத்தில் பள்ளியில் வைத்து பல முறை பல மாணவர்களிடம் தவறாக நடந்திருக்கிறார். எனவே, இது குறித்து ஒரு மாதமாக விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

அதன் பின் அவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். 26 வயதான நாதன் கிரஹாம் என்ற அந்த ஆசிரியர் மீது 8 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இந்த ஆசிரியர், வரும் மார்ச் மாதம் 16ஆம் தேதியன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவிருக்கிறார்.

Categories

Tech |