Categories
உலக செய்திகள்

ராஜதந்திர நெருக்கடி….பிரபல நாட்டின் தூதுவர் வெளியேற்றம்…. காரணம் என்ன?

மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலி மற்றும் பிரான்ஸ் நாடுகளுக்கு இடையே இராஜதந்திர நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் நாட்டின் தூதுவர் வெளியேற காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது.

மாலி நாட்டின்  பிரான்ஸ் தூதுவரான  ஜோயல் மேயர் மாலியின் இடைக்கால அரசாங்க தொடர்பை பற்றி கடும்போக்கான கருத்துக்களை  கூறியுள்ளார்.இதனால்  அவரை  நாட்டை விட்டு வெளியேறுமாறு 72 மணிநேர காலக்கெடு  விதிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் மீண்டும் அவரை பிரான்ஸ் திரும்ப அழைத்துள்ளது.

பிரஞ்சு வெளிவிவகார அமைச்சர் ஜீன் யவேஸ் லே ட்ரைன், கடந்த வாரத்தில் மாலியின் ராணுவ ஆட்சி பற்றி இது சட்டவிரோதமானது மட்டுமின்றி கட்டுப்பாடு எதுவுமற்றது என தெரிவித்தார்.இதுமட்டுமின்றி கடந்த 2020 ஆகஸ்ட் மாதத்தில் மாலியின் ராணுவ அதிகாரத்தை கைப்பற்றியாதல் இரு நாடுகளுக்கும் இடையேயான உறவுகள் மிகவும் மோசமடைந்துள்ளன.

மேலும் தேர்தல்களை  பிப்ரவரியில் நடத்துவதற்கான ஏற்பாடு செய்யும் உடன்பாட்டை இராணுவ ஆட்சிக்குழு மாற்றி அமைத்தது .இதனை அடுத்து 2025 வரை அதிகாரத்தை தம்மிடம் வைத்திருப்போம் என உறுதியளித்ததை அடுத்து இந்த பதட்டங்கள் மேலும் அதிகரித்தது. இதற்கிடையே பிரான்ஸ் விடுத்துள்ள மிரட்டலில், இஸ்லாமிய கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக போராடி வரும் மாலியில் இருந்து தமது படைகளை வெளியேற்றுவோம் என கூறியுள்ளது.

பிரெஞ்சு நாட்டின் முன்னாள் காலனியாக மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலி உள்ளது. இங்கு ப்ரெஞ்சு துருப்புக்கள் 2013 இல் இருந்தே நிறுத்தப்பட்டுள்ளனர். தற்போது பிரெஞ்சு தூதுவர் மாலியில் இருந்து வெளியேற்றப்படுவதால் இருநாடுகளுக்கும் இடையே ராஜதந்திர மோதல்கள் மேலும் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.

Categories

Tech |