கழிவுகளை ஏரிக்கரையோரம் கொட்டி தீ வைப்பதால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சப்படி பகுதியில் ஏராளமான கிரானைட் தொழிற்சாலைகள் அமைந்துள்ளது. இந்த தொழிற்சாலைகளில் இருந்து வரும் கழிவுகளை அங்குள்ள ஏரிக்கரையோரம் கொட்டி வருகின்றனர். இந்நிலையில் மர்ம நபர்கள் கழிவுகளுக்கு தீ வைத்து செல்வதால் பொதுமக்கள் சுவாச கோளாறால் மிகவும் சிரமப்படுகின்றனர். இதுகுறித்து பலமுறை அதிகாரிகளிடம் புகார் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.
நேற்று மாலை மர்ம நபர்கள் கிரானைட் கழிவுகளுக்கு தீ வைத்து சென்றுள்ளனர். இதனால் கண் எரிச்சல், சுவாசக் கோளாறு போன்றவற்றால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே கழிவுகளை ஏரிக்கரையோரம் கொட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.