சட்ட விரோத செயலில் ஈடுபட்ட 32 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சட்டவிரோதமாக புகையிலை பொருட்கள், கஞ்சா, மது பாட்டில்கள் விற்பனை, பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபடுபவர்கள் மீது காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
அதன்படி காவல்துறையினர் சட்டவிரோதமாக மது பாட்டில்கள் விற்பனை செய்த 19 பேரையும், புகையிலை பொருட்கள் விற்பனை செய்த 8 பேரையும், கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட ஒருவரும் மற்றும் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 4 பேர் என மொத்தம் 32 பேரை கைது செய்துள்ளனர்.
மேலும் அவர்களிடமிருந்து 1 கிலோ 200 கிராம் கஞ்சா, 291 புகையிலை பாக்கெட்டுகள், 117 மது பாட்டில்கள் மற்றும் ரூ.1200 ரொக்கப்பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.