Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

சகோதரியை பார்க்க சென்ற பெண்…. வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

பூட்டிய வீட்டிற்குள் பெண் சடலமாக கிடந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பாலப்பள்ளி பகுதியில் கொத்தனாரான கைலாஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கலாராணி என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கலாராணி கைலாஷை விட்டுப் பிரிந்து தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் உடல் நலக்குறைவால் அவதிப்பட்ட கலாராணி அதற்கான சிகிச்சை பெற்று வந்துள்ளார். இதனையடுத்து கலா ராணியின் வீட்டு கதவு நீண்ட நேரமாக பூட்டிய நிலையில் இருந்ததால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் அவரது சகோதரியான மகேஸ்வரி என்பவருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

அந்த தகவலின் படி மகேஸ்வரி அங்கு விரைந்து சென்று பார்த்த போது கலாராணி இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கலா ராணியின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |