Categories
உலக செய்திகள்

பிரேசிலில் பெய்து வரும் கனமழை: 24 பேர் பலி..!! தேடும் பணிகள் தீவிரம்….

பிரேசில் நாட்டில் பெய்து வரும் கனமழையின் காரணமாக வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 24 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரேசில் நாட்டின் தென் கிழக்கில்  சாவ் பாவ்லாஎன்னும் மாநிலம் அமைந்துள்ளது.

இங்கு கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வந்துள்ளது. கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் நிலச்சரிவு மற்றும் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளன. இதனிடையே சுமார் 5 லட்சத்திற்கும் அதிகமான குடும்பங்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி நிவாரண முகாம்களில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக நிலச்சரிவில் சிக்கி இதுவரை 24 பேர் உயிரிழக்கின்றனர். மேலும் நூற்றுக்கும் மேற்பட்டோர் இயற்கை பேரிடர் சிக்கி காயமடைந்துள்ளனர். இதற்கு இடையே வெள்ளம் நிலச்சரிவில் சிக்கி பலர் மாயமாகியுள்ளனர் அவர்களை தேடும் பணியில் மீட்பு குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

Categories

Tech |