மத்திய அரசு ஊழியர்களின் DA ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் வருடத்துக்கு 2 முறை உயர்த்தப்படுகிறது. தற்போதைய அகவிலைப்படியை அடிப்படை ஊதியத்துடன் பெருக்குவதன் மூலமாக DA கணக்கிடப்படுகிறது. அரசு ஊழியர்கள், பொதுத்துறை ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு DA வழங்கப்பட்டு வருகிறது. இந்த DA தொகையானது ஊழியர்களின் அத்தியாவசிய தேவைகளுக்காகவே வழங்கப்படுகிறது. கடந்த 18 மாதங்களாக அகவிலைப்படி நிலுவையில் வைக்கப்பட்டு இருக்கிறது.
மத்திய அரசு தன் 2022- 2023ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டை பிப்ரவரி 1ஆம் இன்று தாக்கல் செய்தது. மத்திய அரசு ஊழியர்களுக்கு நிலுவையில் உள்ள அகவிலைப்படியானது பட்ஜெட் தாக்கலுக்கு பிறகு அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதையடுத்து 18 மாத நிலுவை தொகையும் ஒரே நேரத்தில் செலுத்தப்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இதன் காரணமாக ஊழியர்களின் கணக்கில் ரூபாய் 2 லட்சம் வரை செலுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
இவ்வாறு ஊழியர்களின் அகவிலைப்படி நிலுவையில் இருப்பது தொடர்பாக நிதி அமைச்சகம், பணியாளர் மற்றும் பயிற்சித் துறை மற்றும் செலவினத் துறை அதிகாரிகளுடன் கூட்டு ஆலோசனைப் பொறிமுறையின் கூட்டம் விரைவில் நடைபெற இருக்கிறது. இதில் டிஏ நிலுவைத்தொகையை வழங்குவது தொடர்பாக ஆலோசிக்கப்படும். இதில் நிலை-1 ஊழியர்களின் டிஏ நிலுவைத்தொகை ரூபாய் 11,880 முதல் ரூபாய் 37,000 வரையிலும் இருக்கும். அதே சமயம் நிலை -13 பணியாளர்களுக்கு ரூபாய் 1,44,200 முதல் ரூபாய் 2,18,200 வரை டிஏ பாக்கி செலுத்தப்படும். இது தொடர்பாக விரைவில் முடிவெடுக்க தொழிற்சங்கம் விரும்புவதால் மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.