ஆப்கானிஸ்தான் நாட்டில் 100க்கும் அதிகமான அதிகாரிகள் கொல்லப்பட்டதாக ஐ.நா சபை தகவல் வெளியிட்டுள்ளது.
ஆப்கானிஸ்தான் நாட்டை கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் கைப்பற்றிய தலிபான்கள், கடந்த ஆட்சியில் பணியாற்றிய 100க்கும் அதிகமான அதிகாரிகளை கொலை செய்திருக்கிறார்கள். இதில் அமெரிக்க நாட்டுடன் சேர்ந்து பணி புரிந்த பாதுகாப்பு அதிகாரிகள் உட்பட பலர் உயிரிழந்துள்ளனர் என்று ஐநா சபையின் பொதுச் செயலாளரான ஆண்டனியோ குட்டரேஸ் கூறியிருக்கிறார்.
மேலும் அந்நாட்டில் நடந்த உயிரிழப்புகளில் மூன்றில் இரண்டு பங்கு உயிரிழப்புகள் தலிபான்களால் சட்டவிரோதமாக நடத்தப்பட்ட கொலைகள் என்றும் அவர் குற்றம் சாட்டியிருக்கிறார்.