Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

வீடு திரும்புவதற்காக புறப்பட்ட ஓட்டுனர்…. திடீரென நடந்த விபரீதம்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்….!!

அரசு பேருந்து ஓட்டுனர் திடீரென உடலை நலக்குறைவால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டத்திலுள்ள வாடிப்பட்டி பகுதியில் ராஜா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பல்லடம் அரசு போக்குவரத்து கழகத்தில் ஓட்டுனராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு ஜெயராணி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு பிரவீன் குமார் என்ற மகனும், பிருந்தா என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில் ராஜா அவிநாசி செல்லும் டவுன் பேருந்தை ஓட்டி விட்டு வேலை முடிந்த பிறகு வேறு ஓட்டுனருக்கு மாற்றுவதற்காக பல்லடம் அரசு போக்குவரத்து கழக பணிமனைக்கு கொண்டு சென்றார்.

அங்கு மாற்று ஓட்டுநரிடம் ஒப்படைத்து விட்டு வீடு திரும்புவதற்காக ராஜா புறப்பட்டார். அப்போது திடீரென ராஜாவுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டு ரத்த வாந்தி எடுத்துள்ளார். இதனை பார்த்த உடன் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் அலுவலர்கள் ராஜாவை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு ராஜாவை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |