கடலுக்குள் வீசிய புயலால் டேங்கர் கப்பல் மீது சரக்கு கப்பல் மோதி விபத்தானது.
ஜெர்மனி பகுதியிலிருந்து சரக்கு கப்பல் ஒன்று Amsterdam நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்தக் பிரமாண்டமான கப்பல் வடகிழக்குப் பகுதியில் சென்று கொண்டிருக்கும் போது திடீரென்று புயல் வீசியது. அந்த புயல் 120 கிலோ மீட்டர் வேகத்தில் வீசியது.
இதனால் தொடர்ந்து நான்கு திசையிலும் கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டது. இந்நிலையில் அங்கு எண்ணெய் மற்றும் வேதிப் பொருள்களை ஏற்றிக்கொண்டு வந்த டேங்கர் கப்பல் மீது எதிர்பாராத விதமாக சரக்கு கப்பல் மோதியது. இதனை அறிந்த கடலோர காவல்படையினர் கப்பல்களில் சிக்கி இருந்த 18 பேரை ஹெலிகாப்டர் மூலம் பத்திரமாக மீட்டனர்.