Categories
உலக செய்திகள்

SHOCK NEWS: “கழிவுகளால் கொரோனா பரவும் அபாயம்”…. அதிர்ச்சி கொடுத்த WHO….. முழு விவரம் இதோ….!!

கொரோனாவினால் உருவான மருத்துவ கழிவுகளின் மூலம் பொதுமக்களுக்கு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு அறிக்கை மூலம் தெரிவித்துள்ளது.

கொரோனா பெருந்தொற்றிற்கு பயன்படுத்தப்படும் டெஸ்ட் கிட்டுகளால் 2,600 டன் கழிவுகள் உருவாகியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

மேலும் பொதுமக்களுக்கு போடப்படும் தடுப்பூசியின் மூலம் 1,40,000 டன் கழிவுகள் உருவாகியுள்ளதாகவும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்த கழிவுகள் அனைத்தும் எரிக்கப்படும் அல்லது கொட்டப்படும் பகுதிகளிலிருக்கும் பொதுமக்களுக்கு கொரோனா பாதிக்கும் அபாயமுள்ளதாகவும் உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.

மேலும் இந்த கழிவுகளால் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கும், மனிதர்களின் ஆரோக்கியத்திற்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் அந்நிறுவனம் கூறியுள்ளது.

இதனையடுத்து பாதுகாப்பு உபகரணங்கள் மறுசுழற்சி முறையில் பயன்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டிருந்தால் பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |