மயானத்தில் குடிநீர் இல்லாததால் பஞ்சாயத்து துணைத்தலைவர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள செங்கமலநாச்சியார்புரம் கிராமத்தில் பஞ்சாயத்து துணை தலைவரான மாரியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியிலுள்ள மயானத்துக்கு போதிய குடிநீர் வசதி இல்லை என்றும், மின்மோட்டார் பழுதாகி இருப்பதாகவும் பஞ்சாயத்து நிர்வாகத்திடம் பல முறை மனு அளித்துள்ளார். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காததால் கோபமடைந்த மாரியப்பன் மயானத்தின் முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற அதிகாரிகள் மாரியப்பனிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அப்போது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்த பிறகு மாரியப்பன் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து சென்றுள்ளார்.