Categories
சினிமா

“நம்ம தல டோனியை சந்தித்த பிரபல நடிகர்!”…. வைரலாகும் புகைப்படம்…!!!

கிரிக்கெட் வீரர் டோனியை நடிகர் விக்ரம் சந்தித்தபோது எடுத்த புகைப்படம் இணையதளத்தில் வெளியாகியிருக்கிறது.

கிரிக்கெட் வீரர் டோனிக்கு ஏராளமான ரசிகர்கள் உண்டு. தமிழ்நாட்டில் அவரை தல என்று ரசிகர்கள் செல்லமாக அழைக்கிறார்கள். டோனிக்கு கிரிக்கெட் ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலக பிரபலங்கள் பலரும் ரசிகர்களாக இருக்கிறார்கள்.

அந்த வகையில், நடிகர் விஜய் முதல் சிம்பு, பிரேம்ஜி, இயக்குனர் வெங்கட் பிரபு போன்ற பல திரையுலக பிரபலங்கள் டோனிக்கு தீவிர ரசிகர்களாக இருக்கிறார்கள். இதனைத்தொடர்ந்து, நடிகர் விக்ரம், “நான் டோனியின் ரசிகன்” என்று பல இடங்களில் கூறியிருக்கிறார். இந்நிலையில், அவர் தற்போது டோனியை சந்தித்த புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி கொண்டிருக்கிறது.

Categories

Tech |