Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

அதிவேகமாக வந்த மோட்டார் சைக்கிள்…. சப்-இன்ஸ்பெக்டருக்கு நடந்த விபரீதம்…. வேதனையில் குடும்பத்தினர்….!!

மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் சப்-இன்ஸ்பெக்டர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டத்திலுள்ள குன்னத்தூர் காவல்நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக கருப்பசாமி என்பவர் பணியாற்றி வந்துள்ளார். இவர் பணி முடிந்து தனது மோட்டார் சைக்கிளில் இரவு வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது பெருமாநல்லூர் பகுதியில் வந்து கொண்டிருந்தபோது எதிரே அதிவேகமாக வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று கருப்பசாமி மீது மோதியது.

இதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்த கருப்பசாமியை அருகில் இருந்தவர்கள் உடனடியாக மீட்டு கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி கருப்பசாமி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த குன்னத்தூர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |