கடல் காற்றின் திசை மற்றும் வேகத்தில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதால் உள்ளதால் வடகிழக்கு பருவமழை மேலும் ஒரு வாரம் நீடிக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை குறிப்பிட்ட கால கட்டத்தில் அக்டோபர் மாதம் 16-ந்தேதி தொடங்கியது.
அடுத்தடுத்து உருவான வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாகவும், வங்க கடல், அரபிக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு பகுதியாலும் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் நல்ல மழை பெய்துள்ளது.
வடகிழக்கு பருவமழை டிசம்பரின் இறுதியில் முடிந்துவிடும் என எதிர் பார்க்கப்பட்ட நிலையில் ஜனவரி முதல் வாரம் வரை பருவமழை நீடிக்கும் என வானிலை மையம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை மைய இயக்குனர் புவியரசன் கூறுகையில், கடல் காற்றின் திசை, வேகம் மாறி உள்ளதால் பருவமழை மேலும் ஒரு வாரம் நீடித்துள்ளதாகவும் இதன் காரணமாக கூடுதல் மழை கிடைக்க வாய்ப்பு ஏற்படும் என்றார்.