Categories
தேசிய செய்திகள் வானிலை

“ஆர்வமாக இருந்தேன்”… ஆனால் பார்க்க முடியவில்லை… பிரதமர் மோடி ட்வீட்..!

மேக மூட்டம் காரணமாக என்னால் சூரியகிரகணத்தை பார்க்க முடியவில்லை என்று பிரதமர் மோடி ட்விட் செய்துள்ளார்.

சூரிய கிரகணம் இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் இன்று காலை 8 மணியளில் தொடங்கி காலை 11.20 மணிக்கு முடிவடைந்தது. இந்த கிரகணத்தை பொதுமக்கள் பள்ளி குழந்தைகள் சிறுவர்கள் என பலரும் பார்த்து ரசித்தனர். வெறும் கண்களால் சூரிய கிரகணத்தை பார்க்க கூடாது என்பதால் சோலார், சூரிய கண்ணாடி மூலம் பார்த்து கண்டுகளித்தனர். அதேநேரத்தில் ஒரு சில இடங்களில் பார்க்க முடியாத சூழ்நிலையால் மக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.  கோவையில் மேகமூட்டம் காரணமாக நெருப்பு வளைய சூரிய கிரகணத்தை பார்க்க முடியாததால் மக்கள் ஏமாற்றமடைந்தனர். அதேபோல தேனி, ஈரோடு, சென்னிமலை உள்ளிட்ட பகுதிகளும் சூரிய கிரகணம் தெரியவில்லை.

Image

இந்தநிலையில் சூரிய கிரகணம் குறித்து பிரதமர் மோடி ட்விட் செய்துள்ளார். அதில், பல இந்தியர்களைப் போலவே, நானும் சூரிய கிரகணத்தை காண ஆர்வமாக இருந்தேன். துரதிர்ஷ்டவசமாக, மேக மூட்டம் காரணமாக என்னால் சூரியகிரகணத்தை பார்க்க முடியவில்லை, ஆனால் கோழிக்கோடு உள்ளிட்ட பகுதிகளில் தெரிந்த நெருப்பு வளைய சூரிய கிரகணத்தின் காட்சிகளை நேரலையில் பார்த்தேன். நிபுணர்களுடன் தொடர்புகொண்டு உரையாடி சூரிய கிரகணம் குறித்து மேலும் தெரிந்து கொண்டேன் என்று பதிவிட்டுள்ளார்.

Categories

Tech |