Categories
Uncategorized அரசியல் மாநில செய்திகள்

அறிக்கை விட்டேன் கேட்கல…! இல்லனா தப்பு நடந்துருக்காது… இப்போ என்ன பிரயோஜனம் ..!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, வெள்ளத்தில் சிரஞ்சி இருக்குன்னு சொல்றாங்க. அதைவிட அந்த பொங்கல் தொகுப்பில் கொடுக்கிற அரிசியில் வண்டும் ஊர்ந்து கொண்டிருக்கிறது. கோதுமையிலும் வண்டு ஊர்ந்துக்கிட்டு இருக்குது. அதே மாதிரி புளியில் பல்லி இறந்து கிடக்கு. அதை ஒருவர் சொல்கிறார் நான் வாங்கிய பொங்கல் தொகுப்பில் இந்த புளியில் பல்லி இறந்து கிடக்கிறது என்று சொல்கிறார். அதை சொன்னதற்காக ஜாமீனில் வர முடியாத அளவிலான வழக்குகளை பதிவு செய்கிறார்கள்.

அவருடைய மகன் இதை எண்ணி எண்ணி தற்கொலை செய்து கொண்டார். இப்படிப்பட்ட சம்பவம் எல்லாம் நடந்தது அந்த 8 மாத காலத்தில்…. நான் அறிக்கை விட்டு பதினைந்து நாள் கழித்து விசாரணைக்கு வருகிறார். நான் அறிக்கை விடும் போது 15 சதவீத பொருள்கள்தான் கொடுத்திருந்தார்கள். நியாய விலைக் கடையின் மூலமாக பொங்கல் தொகுப்பு திராவிட முன்னேற்ற கழகம் சார்பாக 15 சதவீதம் தான் கொடுத்திருந்தார்கள்.

அப்பவே நீங்கள் ஒரு குழு போட்டு அறிக்கை தாக்கல் செய்திருந்தால்,  இதையெல்லாம் நிறுத்தி இருக்கலாம். நல்ல பொருள் கொடுத்து இருக்கலாம். ஆனால் இவர்கள் டெண்டர் விட்டு ஊழல் செய்த பிறகு கொள்ளையடித்த பிறகு ஒரு சம்பிரதாயத்திற்காக இந்த ஆய்வு செய்யப்படும் என்று ஒரு ஆய்வு அறிக்கை விட்டு, இவர்கள் மீது நடவடிக்கை எடுப்போம் என்று ஒரு அறிக்கை விட்டிருந்தாங்க.

அப்போதே தடுத்து நிறுத்த வேண்டும்.95 சதவீத பொருள்கள் கொடுத்த பிறகு அதற்குண்டான நடவடிக்கைகள் எடுத்து என்ன பிரயோஜனம். ஆனால் அவருக்கு கிடைக்க வேண்டியது கிடைத்துவிட்டது. மக்கள் இன்று பொங்கல் தொகுப்பிலேயே பயன் பெற முடியவில்லை. பயனடையவில்லை. மாணவி மரணம் தொடர்பாக யாரு ஆடியோ வெளியிட்டார்களோ, அவர்களை தான் நீங்க கேட்கணும். அதற்கான பதில் கிடைக்கும். அவங்க நீதிமன்றத்துக்கிட்ட போயிருக்காங்க. நம்ம நீதிமன்ற விவகாரத்துல தலையிட முடியாது. நீதிமன்றம் உத்தரவு பிறப்பிச்சிருக்கு. அந்த நீதிமன்றத்துல உண்மை நிலவரம் வெளிவரும் என தெரிவித்தார்.

Categories

Tech |