தொழிலதிபர் வீட்டில் நகை, பணம் திருடு போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அவென்யூ பகுதியில் தொழிலதிபரான எஸ். சுகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க சார்பாக இம்மாவட்ட தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்துள்ளார். இந்நிலையில் சுகுமார் தனது குடும்பத்தினருடன் சென்னை சென்று இருந்திருக்கிறார். அதன்பின் அவர் வீட்டில் வேலைக்காரர்கள் வீட்டை திறக்கும் போது பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதனையடுத்து இது தொடர்பாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இது பற்றி தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு மோப்ப நாயுடன் வந்து தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து 38 லட்ச ரூபாய் ரொக்கப்பணம் மற்றும் 12 லட்ச மதிப்புள்ள நகைகள் திருடு போயிருப்பதாக சுகுமார் கூறியுள்ளார். மேலும் இது குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.