Categories
தேசிய செய்திகள்

“உங்கள் போட்டோ மீமாக மாறுகிறது”… கூலாக பதிலளித்த மோடி..!!

ட்விட்டர் பக்கம் ஓன்று உங்கள் புகைப்படம் மீமாக மாறுகிறது என தெரிவித்ததற்கு பிரதமர் மோடி பதிலளித்துள்ளார்.

இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் சூரிய கிரகணம் இன்று காலை 8 மணியளில் தொடங்கி காலை 11.20 மணிக்கு முடிவடைந்தது. இந்த கிரகணத்தை பொதுமக்கள், குழந்தைகள் உட்பட  பலரும் பார்த்து ரசித்தனர். அதேநேரத்தில் ஒரு சில இடங்களில் மேக மூட்டம் காரணமாக பார்க்க முடியாத சூழ்நிலையால் மக்கள் ஏமாற்றம் அடைந்தனர். அதேபோல தேனி, ஈரோடு, சென்னிமலை உள்ளிட்ட பகுதிகளும் சூரிய கிரகணம் தெரியவில்லை.

Image

 இதனிடையே  சூரிய கிரகணம் குறித்து பிரதமர் மோடி ட்விட் செய்துள்ளார். அதில், பல இந்தியர்களைப் போலவே, நானும் சூரிய கிரகணத்தை காண ஆர்வமாக இருந்தேன். துரதிர்ஷ்டவசமாக, மேக மூட்டம் காரணமாக என்னால் சூரியகிரகணத்தை பார்க்க முடியவில்லை, ஆனால் கோழிக்கோடு உள்ளிட்ட பகுதிகளில் தெரிந்த நெருப்பு வளைய சூரிய கிரகணத்தின் காட்சிகளை நேரலையில் பார்த்தேன். நிபுணர்களுடன் தொடர்புகொண்டு உரையாடி சூரிய கிரகணம் குறித்து மேலும் தெரிந்து கொண்டேன் என்று பதிவிட்டார். மேலும்  வானத்தை நோக்கி கூலிங் கிளாஸுடன் நிமிர்ந்து பார்ப்பது,  வானிலை நிபுணர்களுடன் உரையாடுவது மற்றும் சூரிய கிரகணத்தை நேரலையில் பார்ப்பது போன்ற 3 புகைப்படத்தினை இணைத்திருந்தார்.

 

அவருடைய ஒரு புகைப்படத்தை பகிர்ந்த ட்விட்டர் பக்கம் ஓன்று இது மீமாக மாறுகிறது என தெரிவித்திருந்தது. உடனடியாக அதனை ரீ ட்விட் செய்து பதிலளித்த பிரதமர் மோடி “வரவேற்கிறேன். மகிழ்ச்சியாக இருங்கள்” என்று தெரிவித்தார். பிரதமர் மோடியின் இந்த பதிவு பலரது முகத்திலும் புன்முறுவலை ஏற்படுத்தியுள்ளது.

 

Categories

Tech |