Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

உரிய ஆவணம் இல்லை…. சோதனையில் சிக்கிய வாலிபர்…. அலுவலரிடம் ஒப்படைப்பு….!!

உரிய ஆவணங்களின்றி எடுத்து வரப்பட்ட 3 லட்ச ரூபாயை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களுக்கு பரிசுப் பொருட்கள் மற்றும் பணம் வழங்கு வதை தடுக்க பறக்கும் படை அமைக்கப்பட்டு தீவிர வாகன சோதனை நடத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் பறக்கும் படை அதிகாரிகள் தலைமையிலான குழுவினர் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த சரத்குமார் என்பவரை நிறுத்தி சோதனை செய்ததில் உரிய ஆவணங்களின்றி 3 லட்ச ரூபாய் எடுத்து வந்தது அதிகாரிகளுக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து அந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து தேர்தல் அலுவலர் ஸ்டாலின் பாபுவிடம் ஒப்படைத்துள்ளனர்.

Categories

Tech |