வீட்டிற்கு சென்ற பள்ளி ஊழியர் மீது லாரி மோதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள கோவிந்தாபுரம் பகுதியில் மகேந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் பள்ளியில் எழுத்தராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் மகேந்திரன் தனது வேலை முடிந்ததும் வீட்டுக்கு சென்று கொண்டிருக்கும் போது லாரி ஒன்று அவர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த மகேந்திரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இது பற்றி தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மகேந்திரனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநரான செந்தில் என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.