Categories
உலக செய்திகள்

இசை நிகழ்ச்சியின் போது நடந்த பயங்கரம் …!! 2 பேர் உயிரிழப்பு…!! நான்கு பேருக்கு தீவிர சிகிச்சை….!!

பராகுவே நாட்டில்  இசை நிகழ்ச்சியின் போது   நடந்த துப்பாக்கி சூட்டில் இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான பராகுவேவில்   உள்ள சான் பெர்னாடினோ  நகரில் இசை நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் சுமார் 7,000 பேர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது மர்ம நபர் தான்  ஒருவர் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் அங்கிருந்தவர்களை சரமாரியாக சுட்டு விட்டு தப்பித்து விட்டார்.

இதில்   துப்பாக்கி குண்டு பாய்ந்து 2 பேர் சம்பவ இடத்திலேயே  உயிரிழந்துள்ளனர். மேலும் 4 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இசை நிகழ்ச்சியில்  நடைபெற்ற இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் தப்பி ஓடிய நபரை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Categories

Tech |