தேர்தலை முன்னிட்டு 24 மணி நேரமும் வாகன சோதனையில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நகராட்சி தேர்தலில் வாக்காளர்களுக்கு பரிசுப் பொருட்கள் மற்றும் பணம் கொடுப்பதை தடுக்கும் வகையில் மூன்று பறக்கும் படை அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் வாகன சோதனை மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இம்மாவட்டத்தில் இருக்கும் ஏமப்பேர் பகுதியில் அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
ஆனால் இந்த சோதனையில் பரிசுப் பொருட்கள் மற்றும் பணம் எதுவும் அதிகாரிகளுக்கு சிக்கவில்லை. இதேபோல் சங்கராபுரம் பகுதியில் பறக்கும் படை காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். இவற்றிலும் பரிசுப் பொருட்கள் மற்றும் பணம் எதுவும் அவர்களுக்கு சிக்கவில்லை என அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.