Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னையில் 158 வாகனங்கள் பறிமுதல்… காவல்துறை அதிரடி!

சென்னை: வாகனத் தணிக்கையின் போது அதிவிரைவாக சென்ற 158 வாகனங்களை காவல் துறை பறிமுதல் செய்துள்ளது.

சென்னையில் சாலை விதிகளை மீறி அதி விரைவாகச் செல்லும் இருசக்கர வாகனங்களாலும், சாலையில் நடத்தப்படும் வாகன பந்தயங்களாலும் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. இதைத் தடுக்க காவல் துறையினரும் அவ்வப்போது வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில் சென்னை போக்குவரத்து மற்றும் சட்ட ஒழுங்கு காவல் துறையினர் இணைந்து, நேற்று சென்னை காமராஜர் சாலை, அண்ணா சாலை, ராதாகிருஷ்ணன் சாலை, ரோட்டரி, ஜிஎஸ்டி சாலை, சர்தார் பட்டேல் சாலை ஆகிய இடங்களில் சிறப்பு வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

இதில் அதிவேகமாகவும், ஆபத்தாகவும் வாகனங்களை ஓட்டியதற்காக 158 நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அனைத்து வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அதிவிரைவாக வாகனத்தை இயக்கியது, சாலையில் சட்டவிரோதமாக வாகன பந்தயத்தில் ஈடுபட்டது, அஜாக்கிரதையாக வாகனத்தை இயக்கியது உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

2020 புத்தாண்டு விபத்தில்லா தினமாக இருக்கவேண்டி, இந்த சிறப்பு அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், வருங்காலத்தில் தொடர்ந்து வாகன தணிக்கை நடைபெறும் என்றும் சென்னை மாநகர காவல்துறை தெரிவித்துள்ளது.

Categories

Tech |