தமிழ் சினிமாவில் முந்தைய காலத்திலிருந்தே காமெடி உலகில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ள கவுண்டமணி தற்போது வரை எந்த ஒரு விளம்பர நிகழ்ச்சியிலும் நடித்ததில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் காமெடி உலகில் கவுண்டமணி தனக்கென மிகப்பெரிய இடத்தை பிடித்துள்ளார். இவரது காமெடிகளுக்கு ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. இவரை வைத்து படம் இயக்கி பல இயக்குனர்கள் வெற்றி கண்டுள்ளார்கள்.
இந்நிலையில் கவுண்டமணி சினிமாவை தவிர மற்ற நடிகர்கள் போல் இதுவரை விளம்பர படங்களில் நடித்ததே கிடையாதாம். மேலும் இவருக்காக “ரசிகர் மன்றம்” ஒன்றை உருவாக்குவதற்கு பல ரசிகர்கள் திட்டமிட்டுள்ளார்கள்.
ஆனால் தனக்கு ரசிகர்களின் ஆதரவு இருந்தால் மட்டுமே போதும் என்று கூறி அதனை மறுத்துள்ளார். இவ்வாறு இருக்க தற்போது சினிமாவை விட்டு விலகியிருக்கும் கவுண்டமணி கூடிய விரைவில் முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து தனக்குப் பிடித்த காமெடி கதாபாத்திரத்தில் நடிப்பார் என்று ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.