செய்தியாளர்களிடம் பேசிய தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, திராவிட முன்னேற்ற கழகம் 8 மாத ஆட்சி கால ஆட்சியிலே நிறைய செய்தோம் என்று சொல்கிறார்கள். என்ன செஞ்சோம் என்று இதுவரை நாட்டு மக்களுக்கு தெரிவிக்கவில்லை. ஊடகங்களுக்கு தெரிவித்தார்களா ? பத்திரிகையாளர்களுக்கு தெரிவித்தார்களா ? கிடையாது.
8 மாத கால திராவிட ஆட்சியிலே மக்கள் பட்ட துன்பம் தான் அதிகம். திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் தமிழகத்தின் முதலமைச்சர் திரு ஸ்டாலின் அவர்கள், அவரே அவரை புகழ்ந்து கொள்கிறார். இந்தியாவிலே நான் தான் சூப்பர் முதலமைச்சர் . நான்தான் இந்தியாவிலே இருக்கின்ற முதலமைச்சர்களுகெல்லாம் முதன்மை முதலமைச்சர் அப்படி என்று அவர் புகழ்ந்து கொள்கிறார். ஆனால் என்ன செய்தார் ?
இதுவரை சொல்லவே மாட்டேங்கிறாரு. என்ன அவரு தினம்தோறும் காலையில் எழுந்திருக்கிறாரு. ஒரு மூணு நாலு இடத்துல போய் பார்க்கிறாரு, டீக்கடை கண்டா டீ கடையில போய் டீ சாப்பிடுகிறார். போய் வீட்ல ரெஸ்ட் எடுக்கிறார். இல்லைனா நடை பயணம் போய் செய்கிறார். பிறகு எந்த பணியும் இல்லை என்றால் சைக்கிளில் செல்கிறார். இது தான் செய்து கொண்டிருக்கிறார்.
நாட்டு மக்களின் பிரச்சினையை தீர்ப்பதற்கு என்ன நடவடிக்கை எடுத்தார்? சொல்லுங்கள் பார்க்கலாம். எந்த நடவடிக்கையும் எடுக்கல. இன்னைக்கு கொரோனா வைரஸ் ஜெட் வேகத்தில் பரவுதுன்னு சொல்லி சுகாதாரத்துறை அமைச்சர் திரு சுப்பிரமணியம் அவர்கள் தெரிவிக்கிறார். நாம் சொல்லவில்லை அவரே வாக்குமூலம் கொடுக்கிறார். அதைக் கட்டுப்படுத்துவதற்கு என்ன நடவடிக்கைகள் எடுத்தீர்கள்? கிடையாது என விமர்சித்தார்.