செய்தியாளர்களிடம் பேசிய தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, அம்மாவின் அரசு கொரோனா வைரஸ் பரவல் ஆரம்ப கட்டம்… அந்த நோய் எப்படி வரும் ? அது வந்தால் என்ன அறிகுறி தென்படும் என்று தெரியாமல் இருந்த காலகட்டத்திலேயே அந்த நோய் பரவுவதைத் தடுப்பதற்கான முயற்சி எடுத்து அதை தடுத்து நிறுத்திய அரசாங்கம் அம்மாவுடைய அரசாங்கம்.
அந்த நோய் வந்தபோது கூட என்ன சிகிச்சை அளிப்பது என்று மருத்துவருக்கு தெரியாது. படிப்படியா தெரிந்துதான் நாம்ம இந்த நோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்தோம். அப்படி பட்ட காலகட்டத்தில் கூட கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக கடும் முயற்சி எடுத்து இன்று பல்லாயிரக்கணக்கான உயிர்களை காப்பாற்றிய அரசாங்கம் அம்மாவுடைய அரசாங்கம்.
நோய் தொற்று ஏற்பட்டவர்களை முழுமையாக குணமடைய செய்தவர்கள் அம்மாவுடைய அரசாங்கம். அதுமட்டுமில்ல மக்களுக்கு தேவையான கொரோனா வைரஸ் பரவல் ஏற்பட்டுக் கொண்டிருக்கும் போது தேவையான படுக்கை வசதி, தேவையான ஆக்சிஜன் வசதி, தேவையான மருத்துவ உபகரணங்கள், தேவையான மருந்துகள் அனைத்தும் சிறப்பான முறையில் கொள்முதல் செய்து சிகிச்சை அளித்த அரசாங்கம் அம்மா அரசாங்கம்.
இன்றைக்கு நாங்கள் செய்து வைத்ததை தான் நீ வந்து செயல் படுத்திக் கொண்டிருக்கிறாய். அதைக் கூட முழுமையாக செயல் படுத்த முடியல. ஏன்னா புதிய ஆக்சிஜன் படுக்கை அமைக்கிறார்களா ? புதிய படுக்கைகள் அமைக்கிறார்களா ? எதுவுமே கிடையாது.
ஏற்கனவே நாங்கள் செய்து வைத்து இருந்தோம் அதை சரியான முறையில் பயன்படுத்த வில்லை. நாங்கள் இருக்கும்போது வீடு வீடாக சென்று அலுவலர்களை நியமித்து, அவர் வீட்டாக கதவுகளை தட்டி அவர்களுக்கு இருமல் இருக்கிறதா ? காய்ச்சல் இருக்கிறதா ? சளி இருக்கிறதா ? என்பதை தெரிந்து கொண்டு அதற்கேற்ற சிகிச்சை அளித்தோம் என தெரிவித்தார்.