தனுஷ் நடிக்கும் நான் வருவேன் படத்தின் ஆல்பத்தை யுவன் சங்கர் ராஜாவுடன் சேர்ந்து முடித்துவிட்டதாக செல்வராகவன் மாஸ்ஸான அப்டேட் ஒன்றை கொடுத்துள்ளார்.
தனுஷ் ஐஸ்வர்யா விவகாரம் அனைவரிடத்திலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நானே வருவேன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தினை யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
இந்நிலையில் யுவன் சங்கர் ராஜாவுடன் சேர்ந்து நானே வருவேன் படத்தின் ஆல்பத்தை முடித்து விட்டதாகவும், அதனை ரசிகர்களிடம் ஷேர் செய்ய காத்திருப்பதாகவும் அப்படத்தின் இயக்குனரான செல்வராகவன் மாஸ்ஸான அப்டேட் ஒன்றை கொடுத்துள்ளார்.
இந்த ட்வீட்டை கண்ட ரசிகர்கள் வேதனையிலும் ஒரு ஆறுதல் என்று கமெண்ட் செய்துள்ளார்கள். மேலும் யுவன் சங்கர் ராஜா, செல்வராகவன், தனுஷ் ஆகியோர்களின் கூட்டணி எப்போதுமே மிகச் சிறப்பாக தான் இருக்கும் என்று பலரும் கமெண்ட் செய்துள்ளார்கள்.