நேற்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2022-23-ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். இது நான்காவது மத்திய பட்ஜெட் தாக்கல் ஆகும். அப்போது உரையாற்றிய அவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா காரணமாக பள்ளிகள் செயல்படாமல் இருந்தது.
எனவே மத்திய அரசு மாணவர்களின் கல்வித்திறனை அதிகரிக்க முடிவெடுத்துள்ளது. அந்த வகையில் 1 முதல் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மாநில மொழி கல்வியை ஊக்குவிக்கும் விதமாக மாநில மொழிகளில் பாடம் நடத்த கிட்டத்தட்ட 400 தொலைக்காட்சி சேனல்கள் உருவாக்கப்படும். அதேபோல் 2 லட்சம் அங்கன்வாடிகள் நாடு முழுவதும் மேம்படுத்தப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.