தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்களுள் ஒருவரான யோகிபாபு தற்போது 18 படங்களில் நடித்து வருகிறார்.
தமிழ் சினிமாவில் யோகி பாபு மிகவும் பிரபல காமெடி நடிகர்களுள் ஒருவராக திகழ்கிறார். இவருடைய காட்டில் தற்போது பண மழை பெய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது யோகி பாபு எனக்கு டைம் இல்லை என்று கூறினாலும் கூட இயக்குனர்கள் இவரைத் தேடி செல்வதால் நட்புக்காக மொத்தமாக 18 படங்களில் நடித்து வருகிறார். அதில் 6 படங்களில் யோகி பாபு ஹீரோவாகவும் 12 ல் நகைச்சுவை நடிகராகவும் நடித்து வருகிறார்.
இவரது காமெடியால் ஹீரோவுக்கு இணையான ரசிகர் பட்டாளத்தை யோகி பாபு பெற்றுள்ளார். மேலும் இவர் தற்போது தளபதி நடிக்கும் பீஸ்ட் படத்திலும், அஜித் நடிக்கும் வலிமையிலும் காமெடி நாயகனாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.