Categories
மாநில செய்திகள்

கொலை, கொள்ளை நடக்குது…! சும்மா சும்மா கேஸ் போடுறாங்க… பொங்கி எழுந்த எடப்பாடி …!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி,  திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய தலைவர் திரு ஸ்டாலின் முதலமைச்சரின் இந்த அரசாங்கம் 8 மாத கால ஆட்சியில் கொலை, கொள்ளை, திருட்டு தான் அதிகமாக இருக்கிறது. எங்கே பார்த்தாலும் கொலை நடக்குது, திருட்டு நடக்குது, தினம்தோறும் பத்திரிக்கை செய்தி, ஊடக செய்தியில்  இதைதான் காட்டுறீங்க.

ஒவ்வொன்றும் ஒரு இடையில் ஊடகத்தின் வாயிலாக காட்டுகிறீர்கள். எங்கெங்கே கொலை நடக்கிறது? எங்கெங்கு திருட்டு நடக்கிறது ? என்று காட்டுகிறீர்கள். இந்த 8 மாத கால ஆட்சியில் சட்ட ஒழுங்கு அடியோடு சீரழிந்து விட்டது. அதுபோல அண்ணா திமுக நிர்வாகிகள் மீதும், தோழர்கள் மீதும் பொய் வழக்குகள் அதிகமாக போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த செய்தியை வலைதளங்களில் எங்களுடைய தகவல் தொழில் நுட்ப நிர்வாகிகள் வெளியிட்டால் உடனே அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்தல். இது ஒரு சர்வாதிகார ஆட்சியாக இருந்து கொண்டிருக்கிறது. இந்த ஜனநாயக நாட்டிலே இன்று ஜனநாயக முறைப்படி தன்னுடைய கருத்துகளை தெரிவிப்பதற்கு ஒவ்வொரு மனிதனுக்கும், அந்த உரிமை இருக்கிறது. அந்த உரிமையை இந்த அரசாங்கம் பறித்துக் கொண்டிருக்கிறது என தெரிவித்தார்.

Categories

Tech |