Categories
அரசியல் மாநில செய்திகள்

சாராயம் காய்ச்ச தான் ஆகுமாம் ? வயித்துல அடிச்சுட்டாங்க – வேதனையோடு குறிப்பிட்ட இபிஎஸ் …!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி,  இன்றைக்கு இந்த அரசாங்கம் மக்களை ஏமாற்றி விட்டது. தை பிறந்தால் வழி பிறக்கும் என்று தமிழ்நாட்டு மக்கள் எண்ணிக்கொண்டிருந்த வேளையில்,  தைப் பொங்கலை சிறப்பாக கொண்டாட வேண்டும் என்பதற்காக இதயதெய்வம்  புரட்சித்தலைவி அம்மா அவர்கள் பொங்கல் தொகுப்பு திட்டத்தை கொண்டு வந்தார்கள்.

அவர் மறைந்த பிறகு அம்மாவின் உடைய அரசு முழு கரும்பு, பொங்கல் தொகுப்பு, ஆயிரம் ரூபாய் முழுமையாக கொடுத்தோம்‌. அதன்பிறகு போன வருடம் 2500 ரூபாய் கொடுத்தோம். ஆனால் மு க ஸ்டாலின் அவர்கள் 2500 போதாது, 5000 ரூபாய் கொடுங்கள் என்று சொன்னார். இப்போது 100 ரூபாய் கூட கொடுக்கவில்லை குடும்ப அட்டைகளுக்கு. அப்படிப்பட்ட ஆட்சிதான் திமுக ஆட்சி. அதுமட்டுமில்லாமல் இது மக்களினுடைய வயிற்றில் அடித்து இருக்கிறார்கள்.

இன்றைக்கு ஏழை எளிய மக்கள் அதிகமாக இந்த பொங்கல் தொகுப்பை பெற்று, பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட வேண்டும் என்று ஆசையோடு பொங்கல் தொகுப்பை பெற்று வந்தார்கள்.அதிலேயே பார்த்தீர்கள் என்றால் மிளகுக்குப் பதிலாக இலவம்பஞ்சு கொட்டை, பருத்திக் கொட்டை, பப்பாளி விதை இருக்கிறது. இது எவ்வளவு அநியாயம். அதன் பிறகு மஞ்சள் எடுத்து பார்த்தால் அதில் மரத்தூளில் சாயம் கலக்கப்பட்டுள்ளது.

கோலப்பொடி எல்லாம் கலந்திருக்கிறது என்று சொல்கிறார்கள். இவை அனைத்தும் மக்கள் சொல்வதுதான். ஊடகத்திலும் பத்திரிகைகளிலும் வரக்கூடிய செய்திகள். கரும்பில் கொள்முதல் செய்ததில் ஊழல். முப்பத்தி மூன்று ரூபாய்க்கு  கரும்பு என்று கூறுகிறார்கள். ஆனால் நம்முடைய மாவட்டத்திலேயே 16 ரூபாய் 17 ரூபாய்க்கு மேல கரும்பு கொள்முதல் செய்யவில்லை. முந்திரி, திராட்சை, ஏலக்காய் கொடுத்தாங்க. அதிலேயும் அந்த எடை அளவு 50 கிராம் கொடுக்கவில்லை. குறைத்து தான் கொடுத்துள்ளார்கள்.

விழுப்புரத்தில் இருக்கக்கூடிய நியாய விலை கடை ஊழியர்களே அதை சுட்டிக் காட்டினார்கள். அதோட பொருள்கள் முழுமையாக கிடைக்கல, தரமான பொருளா  அதுவும் இல்லை. வெள்ளத்தில் பார்த்திங்கனா… ஒரு பெண் தூக்கி காட்றாங்க அப்படியே ஒழுகுது. அந்தப் பெண் சொல்லுராங்க இது சாராயம் காய்ச்ச தான் ஆகும்ன்னு.

அப்புறம் அந்த வெள்ளத்தில் சிரஞ்சி இருக்குன்னு சொல்றாங்க. அதைவிட அந்த பொங்கல் தொகுப்பில் கொடுக்கிற அரிசியில் வண்டும் ஊர்ந்து கொண்டிருக்கிறது. கோதுமையிலும் வண்டு ஊர்ந்துக்கிட்டு இருக்குது. அதே மாதிரி புளியில் பல்லி இறந்து கிடக்கு. அதை ஒருவர் சொல்கிறார் நான் வாங்கிய பொங்கல் தொகுப்பில் இந்த புளியில் பல்லி இறந்து கிடக்கிறது என்று சொல்கிறார்.

அதை சொன்னதற்காக ஜாமீனில் வர முடியாத அளவிலான வழக்குகளை பதிவு செய்கிறார்கள். அவருடைய மகன் இதை எண்ணி எண்ணி தற்கொலை செய்து கொண்டார். இப்படிப்பட்ட சம்பவம் எல்லாம் நடந்தது அந்த 8 மாத காலத்தில் நடந்துள்ளது என விமர்சித்தார்.

Categories

Tech |