ரஷ்யாவின் படை குவிப்பின் காரணத்தால் போலந்தின் பிரதமர் உக்ரைனுக்கு தற்காப்பு ஆயுதங்களை வழங்கப்போவதாக தெரிவித்துள்ளார்.
ரஷ்யா மற்றும் உக்ரேனுக்குமிடையே கிரீமியா தொடர்பாக பல ஆண்டுகளாக மோதல் போக்கு நீடித்து வருகிறது. இதனையடுத்து ரஷ்யா உக்ரைனின் எல்லையில் தங்களது படைகளை குறித்துள்ளது.
இதனைக் கண்ட அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் ரஷ்யாவிற்கு பலமுறை எச்சரிக்கை விடுத்துள்ளார்கள். மேலும் உக்ரைனுக்கு பல போர் ஆயுதங்களையும் அமெரிக்க மற்றும் மேற்கத்திய நாடுகள் வழங்கியுள்ளது.
இந்நிலையில் போலந்து நாட்டின் பிரதமரான Mateusz Morawiecki ரஷ்யாவின் படை குவிப்பு காரணமாக உக்ரைனுக்கு ட்ரோன் மற்றும் மனிதர்களால் எடுத்துச் செல்லக்கூடிய வான் பாதுகாப்பு அமைப்புகளை வழங்குவதாக தெரிவித்துள்ளார்.