குடியுரிமை திருத்த சட்டம் , தேசிய குடிமை பதிவேட்டுக்கு எதிராக மாணவர்கள் பயமின்றி போராட வேண்டும் என்று மேற்கு வங்க முதல்வர் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு கொண்டுவந்த குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் தேசிய குடியுரிமை பதிவேடுக்கு எதிராக நாடுமுறுவதும் போராட்டம் வலுத்து வருகின்றது. இந்த சட்ட மசோதாவுக்கு எதிராக இந்தியா முழுவதும் உள்ள எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். கர்நாடகம் , உத்தரபிரதேசம் உள்ளிட்ட பாஜக ஆளும் மாநிலத்தில் வன்முறை சம்பவமும் , அடக்குமுறையும் நடந்து வருகின்றது.
தமிழகத்தில் கூட கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தியதன் விளைவாக ஜனவரி 2-ஆம் தேதிவரை கல்லூரி மற்றும் பல்கலைக்கழகத்திற்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. பாஜக_வுக்கு எதிராக ஆட்சி செய்யும் மாநிலத்தில் முதல்வர் எதிர்க்கட்சிகள் என இணைந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். குறிப்பாக கேரளாவில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் , அங்குள்ள எதிர்க்கட்சி காங்கிரஸ்_சும் போராட்டம் , பேரணி நடத்தி வருகின்றது.
அதே போல் மத்திய பிரதேச முதல்வர் , ராஜஸ்தான் முதல்வர் என எதிர்ப்பு தெரிவித்து பேரணி நடத்தி வந்த நிலையில் இன்று மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் நடைபெற்ற பேரணியில் கலந்துகொண்டு பேசிய அம்மாநில முதல்வர் மம்தா பனர்ஜி கூறுகையில் , குடியுரிமை திருத்த சட்டம் , தேசிய குடிமை பதிவேட்டுக்கு எதிராக மாணவர்கள் பயமின்றி போராட வேண்டும். தங்களது ஜனநாயக உரிமைகளை ஜனநாயக வழியில் மாணவர்கள் தொடர்ந்து போராட வேண்டும் என்று தெரிவித்தார்.
தமிழகத்தில் குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் தேசிய குடிமை பதிவேட்டுக்கு எதிராக கல்லூரி மாணவர்கள் , மாணவர் அமைப்புகள் போராட்டம் நடத்திய போது காவல்துறையினரை வைத்து அரசு வழக்கு பதிவு செய்தநிலையில் மேற்கு வங்க மாணவர்களை போராட்ட சொன்னது தமிழக மாணவர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.