திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் கும்பகுடி பகுதியில் சேகர்(58) என்பவர் வசித்துவருகிறார். இவர் பிரபல தனியார் நிதி நிறுவனத்தில் வீடு கட்ட 7 லட்சம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார். அதன் பிறகு அவரால் கடனை சரியாக கட்ட முடியாததால் வீட்டை விற்று கடன் தருவதாக கூறியுள்ளார். ஆனால் இதனை ஏற்க மறுத்து உடனே பணம் கட்ட வேண்டும் என்று மிரட்டி இருசக்கர வாகனத்தை எடுத்துச் சென்றுள்ளனர். அதனால் மனமுடைந்த சேகர் திருச்சி செஷன் நீதிமன்றம் அருகே தீக்குளித்தார். அதன் பிறகு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுபோன்ற கடன் பிரச்சினைகளால் தொடர்ந்து உயிர் இழப்புகள் ஏற்படும் சம்பவம் வேதனையளிக்கிறது.
Categories