Categories
தேசிய செய்திகள்

OMG : ஒமிக்ரான் வைரசின் புதிய மாறுபாடு?…. முதற்கட்ட ஆய்வில்…. விஞ்ஞானிகள் சொன்ன அதிர்ச்சி தகவல்….!!!!

உலகமெங்கும் தற்போது ஒமிக்ரான் வைரஸால் ஏற்பட்ட கொரோனா மூன்றாவது அலை அதிக பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. மேலும் ஒமிக்ரான் வைரசின் புதிய மாறுபாடான பிஏ.2 பிரிட்டன், இந்தியா, டென்மார்க் உள்ளிட்ட 35-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் உலக சுகாதார அமைப்பு மூன்று விதமான மாறுபாடுகளை கொண்ட ஒமிக்ரான் வைரஸ் பிஏ.1, பி.ஏ.2, பி.ஏ.3 என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது.

மேலும் டென்மார்க்கில் இந்த புதிய வகை மாறுபாடான பி.ஏ.2-வால் 45 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இந்த மாறுபாடு தீவிர நோய் பாதிப்பை ஏற்படுத்தாது என்று முதல்கட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. மேலும் இந்தியாவை பொறுத்தவரையில் எந்தெந்த பகுதிகளில் இந்த புதிய மாறுபாடு பரவி வருகிறது என்பது இன்னும் உறுதியாகவில்லை. ஆனால் விஞ்ஞானிகள் ஒமிக்ரான் பி.ஏ.1 வகை வைரஸ் தான் தற்போதைய கொரோனா அலையில் அதிக பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது என்று அதிர்ச்சி தகவலை கூறியிருக்கின்றனர்.

Categories

Tech |