Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் பள்ளிகள் திறப்பில் மாற்றம்?…. மீண்டும் மறுபரிசீலனை?…. வலுக்கும் கோரிக்கை….!!!!

முக்குலத்து புலிகள் கட்சியின் நிறுவனத்தலைவர் ஆறு சரவணத்தேவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் “தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கடந்த மாதம் தமிழகத்தில் ஒமிக்ரான், டெல்டா வைரஸ் இணைந்து சமூக பரவலாக தொடங்கியுள்ளதாக ஊடகங்களுக்கு தகவல் தெரிவித்திருந்தார். அதன்பிறகு ஞாயிறுக்கிழமை முழு ஊரடங்கும், இரவு நேர ஊரடங்கும் போடப்பட்டது. மேலும் வழிபாட்டு தலங்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டது. ஆனால் தற்போது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட மறுநாளே தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்டுள்ளது.

அதோடு மட்டுமில்லாமல் 1 முதல் 12-ஆம் வகுப்புக்கு பள்ளிகளும் திறக்கப்பட்டுள்ளது. தினசரி கொரோனா பாதிப்பு தமிழகத்தில் 27 ஆயிரமாக உள்ளது. இந்த நிலையில் ஊரடங்கை தளர்த்தி பள்ளிகளை எதற்காக திறக்க வேண்டும் ? நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிந்த பிறகு அரசு மீண்டும் ஊரடங்கு போடமாட்டோம் என்பதற்கு உத்தரவாதம் வழங்குமா ? 15 வயதிற்கு மேற்பட்ட பள்ளி மாணவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இருப்பினும் இரண்டு டோஸ் தடுப்பூசி அவர்களுக்கு போடப்படவில்லை.

அப்படி இருக்கையில் சுகாதாரத்துறை அமைச்சர் மற்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கொரோனாவால் மூடப்பட்டிருந்த பள்ளிக்கூடங்கள் எதன் அடிப்படையில் மீண்டும் திறக்கப்பட்டது ? என்பதை தெளிவுபடுத்த வேண்டும். அதேபோல் பள்ளிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகள் என்னென்ன ? என்பதையும் மாணவர்களுடைய பெற்றோர்களுக்கு தெரியபடுத்தி உள்ளீர்களா ? மாணவர்களின் நலன் தேர்தல் அரசியலுக்காக பாதிக்கப்படக்கூடாது. எனவே அரசு பள்ளிகளை திறக்கும் முடிவை மீண்டும் மறுபரிசீலனை செய்ய வேண்டும்” என்று ஆறு சரவணத்தேவர் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

Categories

Tech |