Categories
உலக செய்திகள்

“போச்சா! வீரர்கள் உட்பட 119 பேருக்கு கொரோனா”…. ஒலிம்பிக் போட்டி என்ன ஆகும்….? வருத்தத்தில் வீரர்கள்….!!!

சீன தலைநகரான பீஜிங்கில் குளிர்கால ஒலிம்பிக் போட்டி நடக்கவுள்ள நிலையில் வீரர்கள், பணியாளர்கள் உட்பட 119 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது.

சீனாவில் குளிர்கால ஒலிம்பிக் போட்டியை நடத்துவதற்காக பல்வேறு கட்டுப்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த நான்கு நாட்களில் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க வந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் பணியாளர்கள் என்று மொத்தமாக 119 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டிருக்கிறார்கள். எனவே, வீரர்களும், வீராங்கனைகளும் தங்களின் ஒலிம்பிக் கனவு பாழாகி விடும் என்று வேதனை தெரிவித்திருக்கிறார்கள். இதனிடையே, ஒலிம்பிக் போட்டியை காண வந்திருக்கும் மக்கள், அவர்கள் தங்கியிருக்கும் இடம், மற்றும் ஒலிம்பிக் மைதானத்திற்கு இடையில் மட்டும் செல்வதற்கு அனுமதி வழங்கப்படும் என்றும் பொது இடங்களில் சுதந்திரமாக செல்வதற்கு அனுமதி கிடையாது என்றும் போட்டி ஏற்பாட்டாளர்கள் கூறியிருக்கிறார்கள்.

Categories

Tech |