Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

2 முக்கிய இடங்களில் சுரங்க பாதைகள்…. அறிக்கை தாக்கல் செய்த குழுவினர்…. தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவு…!!

ரயில் மோதி யானைகள் இறப்பதை தடுக்கும் பொருட்டு 2 இடங்களில் சுரங்கப் பாதை அமைக்க வேண்டும் என ஆய்வுக்குழுவினர் அறிக்கை தாக்கல் செய்துள்ளனர்.

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள மதுக்கரையில் இருந்து கேரள மாநிலம் வளையார் வரை இருக்கும் ரயில்வே தண்டவாளத்தை கடக்கும் போது காட்டு யானைகள் ரயில் மோதி இறக்கும் சம்பவம் அடிக்கடி நடைபெறுகிறது. இதனை தடுப்பதற்காக ஆய்வுக் குழு அமைத்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு தேசிய பசுமை தீர்ப்பாயம் மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் வனப்பாதுகாவலர் ஹரிகுமார் தலைமையிலான ஆய்வுக்குழுவினர் மத்திய அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்துள்ளனர். அந்த அறிக்கையை தென்காசி மாவட்டத்திலுள்ள பாவூர்சத்திரத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் பாண்டியராஜா தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெற்றார்.

அதில் கூறப்பட்டுள்ளதாவது, மதுக்கரையில் இருந்து ஏ மற்றும் பி என 2 ரயில் பாதைகள் வழியாக கேரள மாநிலத்திற்கு செல்கிறது. கடந்த 20 ஆண்டுகளில் ரயில் மோதி 26 யானைகள் இறந்து விட்டன. மேலும் கடந்த 12 ஆண்டுகளில் 395 முறை யானைகள் தண்டவாளத்தில் நிற்பதை என்ஜின் டிரைவர்கள் பார்த்துள்ளனர். எனவே பி லைனில் அதிக விபத்துகள் நடப்பதால் ஏ லைனில் அதிக ரயில்களை இயக்க செய்தல், தண்டவாளத்தின் இருபுறமும் இருக்கும் செடிகொடிகளை வெட்டுதல், 2 இடங்களில் சுரங்க பாதை அமைத்தல் உள்பட பல்வேறு கருத்துக்கள் அறிக்கையில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

Categories

Tech |