1-ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் திடீரென உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பெரியபொன்மாந்துறை பகுதியில் கூலி தொழிலாளியான மருதன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சித்ரா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு 6 வயதுடைய விஜயகுமார் என்ற மகன் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 1-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்த சிறுவன் வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டு அதற்கான சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் பள்ளிக்கு சென்று விட்டு மாலை வீடு திரும்பிய விஜயகுமார் தனது தாயிடம் உடல் நிலை சரி இல்லை எனக்கூறி தூங்கியுள்ளார்.
அப்போது சிறுவனின் வாயில் இருந்து ரத்தம் வெளியேறியதை பார்த்து அதிர்ச்சியடைந்த பெற்றோர் உடனடியாக அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு சிறுவனை பரிசோதித்து பார்த்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சிறுவன் திடீரென உயிரிழந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.