மக்கள் போராட்டத்திற்கு மத்தியில் ஆஸ்திரிய நாட்டில் 18 வயதுக்கு அதிகமானோருக்கு கொரோனா தடுப்பூசி கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது.
ஆஸ்திரிய நாட்டில் சுமார் 72% மக்களுக்கு முழுமையாக கொரோனா தடுப்பூசியளிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் மக்கள் தங்கள் உடம்பில் எந்த மருந்தை செலுத்த வேண்டும் என்பது தங்களின் விருப்பமாகத்தான் இருக்க வேண்டும். ஆட்சியாளர்களின் விருப்பமாக இருக்கக் கூடாது என்று போராட்டம் நடத்த தொடங்கியுள்ளனர்.
எனினும், கொரோனா தடுப்பூசி கட்டாய சட்டம் நடைமுறைக்கு வந்திருக்கிறது. இதன் மூலம் தடுப்பூசி எடுத்துக் கொள்ளாத மக்களுக்கு, 600 யூரோக்களிலிருந்து 3600 யூரோக்கள் வரை அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
எனினும், கர்ப்பிணிப் பெண்களுக்கும் மருத்துவ காரணங்களால் சிகிச்சை எடுத்து வருபவர்களுக்கும், இதில் விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. ஐரோப்பிய நாடுகளிலேயே ஆஸ்திரேலியாவில் தான் கொரோனா தடுப்பூசி கட்டாய சட்டம் நடைமுறைக்கு வந்திருக்கிறது.