நூல் விலை மேலும் அதிகரித்துள்ளது நெசவாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
2022-23 ஆம் ஆண்டுக்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று முன்தினம் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையுடன் தொடங்கியது. இரு அவைகளின் கூட்டத்தில் அவர் உரையாற்றினார். அந்த உரையில் மத்திய அரசின் சாதனைகளை பட்டியலிட்டு பேசினார். அதன் தொடர்ச்சியாக பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்பட்ட நிலையில் நேற்று 2022- 23 ஆம் நிதியாண்டுக்கான காகிதமில்லா பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று காலை 11 மணி அளவில் தாக்கல் செய்தார். இதையடுத்து பல்வேறு முக்கிய அம்சங்களை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.
இந்நிலையில் நூல் விலையை குறைக்க மத்திய நிதிநிலை அறிக்கையில் நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்ப்பு இருந்த நிலையில், கிலோவிற்கு ரூபாய் 10 அதிகரித்துள்ளது. ஓராண்டுக்கு முன்பு ரூபாய் 220 முதல் 230 வரை இருந்த ஒரு கிலோ நூல் விலை, தற்போது 390 ரூபாயாக அதிகரித்துள்ளது. நூல் விலை உயர்வால் பின்னலாடை வர்த்தகம் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.