Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று பிப்ரவரி 3…!!

பெப்ரவரி 3  கிரிகோரியன் ஆண்டின் 34 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 331 (நெட்டாண்டுகளில் 332) நாட்கள் உள்ளன.

இன்றைய தின நிகழ்வுகள்

1377 – இத்தாலியின் செசெனா நகரத்தில் பாப்பரசரின் படைகளினால் 2,000 க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.

1451 – சுல்தான் இரண்டாம் முகமது உதுமானியப் பேரரசராக முடிசூடினார்.

1488 – போர்த்துகலின் பார்த்தலோமியோ டயஸ் நன்னம்பிக்கை முனையைச் சுற்றி வந்து மொசெல் விரிகுடாவில் தரையிறங்கி, தூரதெற்குப் பகுதிக்குச் சென்ற முதலாவது ஐரோப்பியரானார்.

1509 – இந்தியாவில் தியூ என்ற இடத்தில் இடம்பெற்ற சமரில் உதுமானிய, வெனிசு, குசராத்து, சமோரின் கூட்டுப் படைகளை போர்த்துக்கீசக் கடற்படை வென்றது.

1661 – மரதப் படைகள் பேரரசர் சிவாஜியின் தலைமையில் முகலாயப் படைகளை வென்றது.

1690 – ஐக்கிய அமெரிக்காவின் முதலாவது நாணயத்தாள் மசாசூசெட்சில் அறிமுகப்படுத்தப்பட்டது.

1706 – புரோஸ்டட் போரில் சுவீடன் படை சாக்சனி-போலந்து-உருசியக் கூட்டுப் படைகளை இரட்டை சுற்றி வளைப்பு உத்தியைப் பயன்படுத்தி வென்றது.

1781 – அமெரிக்கப் புரட்சிப் போர்: பிரித்தானியப் படை இடச்சின் கட்டுப்பாட்டில் இருந்த சின்டு யுசுடாசியசு என்ற கரிபியன் தீவைக் கைப்பற்றியது.

1783 – ஐக்கிய அமெரிக்காவின் விடுதலையை எசுப்பானியா அங்கீகரித்தது.

1807 – பிரித்தானியப் படை சர் சாமுவேல் ஓசுமுட்டி தலைமையில் மொண்டேவீடியோவைக் (இன்றைய உருகுவேயின் தலைநகர்) கைப்பற்றியது.

1830 – கிரேக்கம் உதுமானியப் பேரரசிடம் இருந்து கிரேக்கம் முழுமையாக விடுதலை அடைவதற்கு ஏதுவான உடன்பாடு இலண்டனில் எட்டப்பட்டது.

1870 – ஐக்கிய அமெரிக்காவில் அனைத்து இன ஆண்களுக்கும் வாக்களிக்கும் உரிமை வழங்கப்பட்டது.

1876 – பராகுவே ஆர்ஜெண்டீனாவுடன் அமைதி ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டது.

1870 – ஐக்கிய அமெரிக்காவில் அனைத்து இன ஆண்களுக்கும் வாக்களிக்கும் உரிமை வழங்கப்பட்டது.

1894 – யாழ்ப்பாணத்தின் பல இடங்களிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது.[1]

1913 – ஐக்கிய அமெரிக்காவில் வருமான வரி அறவிடும் உரிமை நடுவண் அரசுக்கு வழங்கப்பட்டது.

1916 – கனடாவில் ஓட்டாவாவில் நாடாளுமன்றத்தின் மைய வளாகக் கட்டடம் தீயினால் அழிந்தது. ஏழு பேர் உயிரிழந்தனர்.

1917 – முதலாம் உலகப் போர்: ஐக்கிய அமெரிக்கா செருமனியுடனான தூதரக உறவைth thuNdiththathu.

1930 – பிரித்தானிய ஆங்காங்கின் கவுலூனில் இடம்பெற்ற மாநாட்டில் வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சி ஆரம்பிக்கப்பட்டது.

1931 – நியூசிலாந்தில் நேப்பியர் என்ற இடத்தில் இடம்பெற்ற 7.9 ரிக்டர் அளவு நிலநடுக்கத்தினால் 258 பேர் உயிரிழந்தனர்.

1943 – டோர்செசுடர் என்ற அமெரிக்கக் கப்பல் செருமனியின் நீர்மூழ்கியினால் தாக்கப்பட்டு மூழ்கடிக்கப்பட்டதில், 902 பேரில் 230 பேர் மட்டுமே உயிர் தப்பினர்.

1944 – இரண்டாம் உலகப் போர்: அமெரிக்க இராணுவ, கடற்படைகள் சப்பானிடம் இருந்து மார்சல் தீவுகளைக் கைப்பற்றின.

1945 – இரண்டாம் உலகப் போர்: மணிலா நகரை சப்பானிடம் இருந்து கைப்பற்ற அமெரிக்காவும் பிலிப்பீன்சும் ஒரு மாதம் நீடித்த போரைத் தொடங்கின.

1945 – இரண்டாம் உலகப் போர்: ஐக்கிய அமெரிக்காவின் 1,000 விமானங்கள் பெர்லின் மீது குண்டுகளை வீசின. 2,500 முதல் 3,000 வரையானோர் கொல்லப்பட்டனர்.

1966 – சோவியத் விண்கலம் லூனா 9 சந்திரனில் தரையிறங்கிய முதலாவது விண்கலம் என்ற பெருமையைப் பெற்றது.

1969 – யாசர் அரபாத் பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் தலைவராகத் தெரிவானார்.

1972 – ஈரானைப் பெரும் பனிப்புயல் தாக்கியது. அடுத்த ஏழு நாட்களில் 4,000 பேர் வரை உயிரிழந்தனர்.

1984 – அமெரிக்காவில் வரலாற்றில் முதல் தடவையாக ஒரு பெண்ணில் இருந்து மற்றொருவருக்கு கருமாற்றம் வெற்றிகரமாக நிறைவேற்ரப்பட்டது.

1984 – சாலஞ்சர் விண்ணோடத்தில் சென்ற விண்வெளி வீரர்கள் புரூஸ் மக்காண்ட்லெஸ், ராபர்ட் ஸ்டுவேர்ட் ஆகியோர் முதன் முதலாக விண்வெளியில் சுயாதீனமான நிலையில் நடந்து சாதனை படைத்தார்கள்.

1989 – பராகுவேயில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியை அடுத்து 1954 இலிருந்து ஆட்சியிலிருந்த சர்வாதிகாரி அல்பிரெடோ ஸ்ட்ரோயெசுனர் பதவியிழந்தார்.

1998 – இத்தாலியில் தாழப் பறந்த விமானம் ஒன்று கம்பிவட ஊர்தியொன்றின் கம்பிகளை அறுத்ததில், 20 பேர் உயிரிழந்தனர்.

1998 – தம்பலகாமம் படுகொலைகள்: இலங்கை, தம்பலகாமம் என்ற கிராமத்தில் ஊர்காவல் படையினரின் சுற்றிவளைப்பின் போது சிறுவர்கள் உட்பட எட்டு தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

2006 – அல் சலாம் 98 என்ற எகிப்திய பயணிகள் கப்பலொன்று செங்கடலில் 1,721 பேருடன் மூழ்கியதில் 435 பேர் மட்டும் மீட்கப்பட்டனர்.

2007 – பக்தாத் சந்தை ஒன்றில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் குறைந்தது 135 பேர் கொல்லப்பட்டனர்.

2014 – மாஸ்கோ பாடசாலை ஒன்றில் இடம்பெற்ர துப்பாக்கிச் சூட்டில் இருவர் கொல்லப்பட்டனர், 29 மாணவரக்ள் பணயக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர்.

இன்றைய தின பிறப்புகள்

1504 – ஸ்கிபியோன் ரெபிபா, இத்தாலியக் கத்தோலிக்க திருச்சபையின் கர்தினால் (இ. 1577)

1821 – எலிசபெத் பிளாக்வெல், அமெரிக்க மருத்துவர், கல்வியாளர் (இ. 1910)

1898 – அல்வார் ஆல்ட்டோ, பின்லாந்துக் கட்டிடக் கலைஞர் (இ. 1976)

1899 – லாவ் ஷே, சீன எழுத்தாளர் (இ. 1966)

1900 – டி. ஆர். சேஷாத்ரி, தமிழக வேதியியலாளர் (இ. 1975)

1930 – மணி கிருஷ்ணசுவாமி, கருநாடக இசை வாய்ப்பாட்டுக் கலைஞர் (இ. 2012)

1933 – தான் சுவே, பர்மிய அரசியல்வாதி, பிரதமர்

1938 – வஹீதா ரெஹ்மான், இந்தியத் திரைப்பட நடிகை

1944 – கந்தர்வன், தமிழக எழுத்தாளர், கவிஞர், தொழிற்சங்கவாதி (இ. 2004)

1963 – ரகுராம் கோவிந்தராஜன், இந்தியப் பொருளியல் அறிஞர், கல்வியாளர்

1966 – பிராங்க் கெரசி, அமெரிக்கத் திரைப்பட இயக்குநர்

1983 – சிலம்பரசன், தமிழக நடிகர்

இன்றைய தின இறப்புகள்

 1468 – யோகான்னசு கூட்டன்பர்கு, அச்சியந்திரத்தைக் கண்டுபிடித்த செருமானியர் (பி. 1398)

1855 – டானியல் புவர், அமெரிக்க இலங்கை மிஷனின் மூத்த முதல்வர்

1883 – ரிச்சார்ட் வாக்னர், செருமானிய இயக்குநர், இசையமைப்பாளர் (பி. 1813)

1900 – எ. ஆ. கிருட்டிணப் பிள்ளை, தமிழகக் கிறித்தவத் தமிழ்ப் புலவர் (பி. 1827)

1915 – யோன் சிலம்புவே, ஆபிரிக்க விடுதலைப் போராளி (பி. 1871)

1919 – எட்வார்டு சார்லசு பிக்கரிங், அமெரிக்க வானியலாளர், இயற்பியலாளர் (பி. 1846)

1924 – ஊட்ரோ வில்சன், அமெரிக்காவின் 28வது அரசுத்தலைவர், அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர் (பி. 1856)

1925 – ஆலிவர் ஹெவிசைடு, ஆங்கில மின்பொறியாளர், கணிதவியலாளர், இயற்பியலாளர் (பி. 1850)

1964 – கதிரவேலு சிற்றம்பலம், ஈழத்து அரசியல்வாதி (பி. 1898)

1969 – கா. ந. அண்ணாதுரை தமிழகத்தின் 7வது முதலமைச்சர், எழுத்தாளர் (பி. 1909)

1975 – வில்லியம் டி. கூலிட்ச், அமெரிக்க இயற்பியலாளர், பொறியியலாளர் (பி. 1873)

1975 – உம் குல்தூம், எகிப்தியப் பாடகி, நடிகை (பி. 1904)

1987 – ஜார்ஜ் தாம்சன், பிரித்தானிய மார்க்சியப் புலமையாளர், மானிடவியலாளர் (பி. 1903)

2005 – எர்ணஸ்ட் மாயர், செருமானிய-அமெரிக்க உயிரியலாளர், பறவையியலாளர் (பி. 1904)

2016 – பல்ராம் சாக்கர், இந்திய அரசியல்வாதி (பி. 1923)

இன்றைய தின சிறப்பு நாள்

கம்யூனிஸ்டுக் கட்சி நிறுவன நினைவு நாள் (வியட்நாம்)

மாவீரர் நாள் (சாவோ தொமே மற்றும் பிரின்சிப்பி)

Categories

Tech |